ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு திருநாவுக்கரசு தெரு பகுதியை சேர்ந்த காளி என்பவரது மகள் ஜோதி. இவர் நான்காவது பிரசவத்திற்காக தந்தை வீட்டிற்கு நேற்று வந்திருந்த நிலையில் எட்டு மாத கர்ப்பிணியான ஜோதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தையை பெற்றுள்ளார்.

குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மேலும் ஜோதி தனது குழந்தையின் தொப்புள் கொடியை தானே அறுத்துவிட்டதாகவும் பின்னர் தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சொல்லுங்கள் என கணவன் மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு! இருவர் உயிருக்கு போராட்டம்! ராணிப்பேட்டையில் பரபரப்பு!
அதிகப்படியான ரத்தப்போக்கு வெளியேறிய நிலையில் இருந்த ஜோதியை உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக ஜோதி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் தாய் மற்றும் குழந்தை பிரசவத்தின் போது உயிரிழந்திருக்கும் சம்பவம் குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஜோதி 4வது முறையாக கர்ப்பமாக இருந்தது அவரது பெற்றொருக்கே தெரியாது என்றும், வீட்டில் தனியாக இருக்கும் போது வழி எடுக்கவே குழந்தையை தனக்குத் தானே பிரசவம் பார்த்து ஜோதி பெற்றெடுத்ததாகவும் போலீசில் கூறியுள்ளனர். மேலும் தாங்கள் வீட்டிற்கு வந்த போது மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது தான் அவர் பிரசவத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தது எங்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக வீட்டிற்கு சென்று தேடிய போது குறைபிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையை ஜோதி கட்டைப்பையில் போட்டு பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தது தங்களுக்கு தெரியும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் கோர விபத்து; நேருக்கு நேர் மோதிய லாரி - பேருந்து - 4 பேர் உடல் நசுங்கி பலி!