சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர்கள் ராஜாசிங் மற்றும் சன்னிலாய்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 80 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் வெறி தலைக்கேறிய சப்- இன்ஸ்பெக்டர்..! அதிரடியாக வெளியே தூக்கி அடித்த மாவட்ட எஸ்.பி!!

காவல்துறை தரப்பில், ராஜா சிங் மற்றும் சன்னி லாய்டு இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, சன்னி லாய்டு மற்றும் ராஜா சிங் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நெற்பயிர்களை அழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. மனித உரிமை ஆணையம் பரிந்துரை..!