இளம் தலைமுறையினர் மத்தியில் நிகழும் வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் தன்னுடன் பயிலும் சக மாணவரை கத்தியால் குத்தி உள்ளார். மேலும் தடுக்க வந்த ஆசிரியரும் இதில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கத்தியால் குத்திய மாணவருக்கு 15 நாட்கள் காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் மோதலுக்கு சமூக வலைத்தளங்களை காரணம் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்காமல், பெற்றோர் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லையை அதிர வைத்த சம்பவம்.. அறிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாள் காவல்..!
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆகிட்டதா நினைப்பா? - எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த துக்ளக் ரமேஷ்!