செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச் தனது பதவி காலத்தின் போது முறைகேடு செய்ததாக, ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிடுவதில் பெரிய அளவிலான நிதி மோசடி மற்றும் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி, பத்திரிகையாளர் ஒருவர் மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: செபி அமைப்பின் புதிய தலைவராக நிதி செயலர் துஹின் கந்தா பாண்டே நியமனம்..!

புகார் மற்றும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்த நீதிமன்றம், தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கண்டறிந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து, மாதவி புரி புச் மற்றும் மும்பை பங்குச் சந்தை அதிகாரிகள் 5 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து வழக்கு தொடர, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தங்கள் வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ள செபி, இந்த உத்தரவுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் இளம்பெண் வீட்டிற்குள்ளேயே கொலை... 'பாய் ஃப்ரண்ட்' நடத்திய பயங்கர சம்பவம்..!