உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை ஒன்றாம் நாள் விளங்கி வருகிறது. இதனை தமிழ் புத்தாண்டு என்றும் சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உள்ளது அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானதாக கருதப்படுகிறது.

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன அமர்களது தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை மாதம் முதலாவது மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் சூரியன் அதன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாளையும், சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளையும் தான் சித்திரை மாதம் என கொண்டாடுகிறோம்.
இதையும் படிங்க: திடீரென மோடியை புகழ்ந்து தள்ளிய பிரேமலதா விஜயகாந்த்.. பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா..?

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்று அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தைச் சுற்றிப்பார்க்க பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயில்களிலும், சுற்றுலா தளங்களிலும் குவிந்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்பேத்கரே காவிதான்... திமுகவை திக.,காரன் சுரண்டி திங்கிறான்.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்..!