இந்திய தேசியக் கலை மற்றும் பாரம்பரியப் பொருட்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் சுவடிகள் 1995 ஆம் ஆண்டு கணக்கெடுக்கும் பணி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 31.5 லட்சம் சுவடிகளுக்கு மேல் இருப்பது அறிய முடிகிறது. மேலும் சுமார் 1,50,000 சுவடிகள் ஆசியக் கண்டத்திலும் 60,000 சுவடிகள் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

தமிழ் சுவடிகள் என்பது, ஓலைகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள், சான்றோர்களின் கருத்துக்கள், கலைகள், மருத்துவம் போன்ற பலவகையான தகவல்களைக் கொண்ட பழமை வாய்ந்த ஒன்று.
இதையும் படிங்க: மாநிலங்களின் உரிமையை நீதிமன்றங்கள் தான் காக்கின்றன.. மெட்ராஸ் பார் அசோசியேஷன் கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
எழுதப்பட்ட சுவடிகள் பல்வேறு காரணங்களால் அழிவிற்கு உள்ளாகின்றன. இயற்கை அழிவு, செயற்கை அழிவு, அறியாமை அழிவு என பல காரணங்களால் அழிந்து விடுகின்றன. எனவே, பழந்தமிழ் சுவடிகளை பாதுகாக்கும் வண்ணம் அதனை மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என பழ நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திலுள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்திடும் திட்டத்தை தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்பதகாவும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகங்களிலும், அந்நாடுகளின் தேசிய நூலகங்களிலும் பல்லாயிரக்கணக்கான பழம் ஓலைச்சுவடிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் இங்கிருந்து கொண்டு சென்ற பழம் ஓலைச்சுவடிகளும், ஆவணங்களும் இந்நாடுகளில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களில் ஏராளமாக உள்ளன என கூறியுள்ளார்.
இவற்றின் காலம் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று தெரிவித்த அவர், எனவே, இவற்றையெல்லாம் உடனடியாக மின் பதிப்பாக்கம் செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து சேமித்து வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ஆய்வாளர்கள் இவற்றை ஆய்வு செய்வதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டே பழ.நெடுமாறன், இதன்மூலம் இதுவரை கிடைக்காத பழந்தமிழ் நூல்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உருவாகும் என்றும் எனவே, பழந்தமிழ் சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்யும் திட்டத்தை உலக நாடுகளுக்கும் விரிவாக்க வேண்டும் என முதல்வரையும், நிதியமைச்சரையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், வேளாண் பட்ஜெட் பாராட்டத்தக்க ஒன்று - வேல்முருகன்..!