தமிழக சட்டசபையில் கடந்த 14 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைப்பெற்றன.

இந்த நிலையில், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் ஆரம்பமானது. கேள்வி நேரம் முடிந்ததும் நீர்வளத் துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் திமுக கொடிக் கம்பங்களை அகற்ற துரைமுருகன் உத்தரவு.. கோபத்தில் டோஸ் விட்ட கூட்டணி கட்சி.!!

அதில், காவிரி டெல்டா பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடஇந்திய பெண்கள் பற்றி அருவருப்பான சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேளுங்கள் துரைமுருகன்.. வானதி சீனிவாசன் ஆவேசம்!