இந்தியாவில் உள்ள கோவில்களில் மிக உயரமான தங்க கோபுரம் அமைக்கப்பட்டு இருக்கும் கோவில் தெலுங்கானா மாநிலம் யாதகிரிகுட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயில் ஆகும்.
இந்த கோவிலில் இருக்கும் கோபுரத்துக்கு முழுமையாக தங்க கவசம் பூசப்பட்டிருக்கிறது. அதாவது 10 ஆயிரத்து 759 சதுர அடி பரப்பளவிற்கு தங்கக் கவசம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இதன் அடிப்படையில் இந்த கோவில் தான் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரத்தை கொண்ட கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் சரிந்து விழுந்த மணமகளின் தந்தை.. நொடியில் துக்க வீடான திருமண வீடு.!

இந்த கோவில் மற்றும் தங்க கோபுர கும்பாபிஷேக விழா நேற்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. வேத மந்திரங்களுக்கு மத்தியில் சிறப்பு பூஜைகளை செய்த பின் முதல்வர் தங்க கோபுரத்தை திறந்து வைத்தார்.
கும்பாபிஷேக விழாவில் முதல்வருடன் அவருடைய மனைவி கீதாவும் பங்கேற்றார். வானமா மாலை மடத்தின் 31-வது பீடாதிபதி ராமானுஜர் ஜி எஸ் சுவாமிகளின் மேற்பார்வையில் உற்சவம் நடைபெற்றது.
பின்னர் ரேவேந்த் ரெட்டி தனது மனைவி தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி மற்றும் கட்சி தலைவர்களுடன் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி வழிபட்டார்.
ரூ.80 கோடியில்...
கோபுரத்திற்கு தங்க முலாம் பூசுவதற்காக 68 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. விமான கோபுரம் திருமலை கோபுரம் போல் 33 அடி அமைப்பும் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 55 அடி உயரம் கொண்டதாக கூறப்படுகிறது. தங்கமெல்லாம் பூசுவதற்கான செலவு 80 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

இந்த தங்க கோபுரம் கோவிலின் அழகுக்கு மேலும் எழில் கூட்டுகிறது. கோவில் கோபுரத்தில் நிரு லட்சுமி கேசவ நாராயணா மற்றும் கருட மூர்த்தி படங்கள் உள்ளன. இது மதத் தலைவர்கள் மற்றும் கோவில் கட்டுமான நிபுணர்களின ஆலோசனையுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்ட நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டது.
சந்திரசேகர ராவ் எடுத்த முயற்சி!
தங்கக் கோபுரம் அமைக்கும் முடிவு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆட்சியின் போது எடுக்கப்பட்டது. இதற்காக அவர் ஒரு கிலோ 16 தோலா தங்கத்தை நன்கொடையாக வழங்கியிருந்தார். மேலும் அவருடைய வேண்டுகோளை ஏற்று மதத் தலைவர்களும்பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் பணிகளை செய்வதற்கு நன்கொடைகளை வழங்கி இருந்தனர்.
இதுதொடா்பாக கோவில் நிர்வாக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "தங்க முலாம் பூசப்பட்ட புதிய கோபுரத்துடன் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேக நிகழ்வில் முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்றாா்.

தங்க முலாம் பூசப்பட்ட இக்கோயிலின் 50.5 அடி உயர கோபுரம், இப்போது நாட்டிலேயே மிக உயரமானது. விழாவில், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த முதல்வா் ரேவந்த் ரெட்டி, வேத பண்டிதா்களிடம் ஆசி பெற்றாா்.
வானமாமலை மடத்தின் 31-ஆவது பீடாதிபதியான ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தலைமையில் கோயில் கும்பாபிஷேக சடங்குகள் நடைபெற்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தெலங்கானா சுரங்க விபத்து: மேலே தெரிந்த ஊழியரின் கை..! சிக்கிய 8 பேரும் பலியா? மீட்பு பணியில் ராணுவம்..!