கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் அனுராக் காஷ்யப்பும் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த வர்ஷா பாரத் என்பவர் இயக்கியுள்ளார். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த டீசரில், பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணின் முதல் காதல், முதல் முத்தம் என தொடங்கி ஆசைகள், எதிர்பார்ர்புகள், காதல் பிரிவு மற்றும் ஆபச காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் இந்த டீசரை யூட்யூபில் இருந்து நீக்க கோரி வழக்குத் தொடரப்பட்டது. மதுரை வெங்கடேஷ் , ரமேஷ் குமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 26.01.2025 அன்று யூடியூப் இணையத் தில் பேட் கேர்ள் என்ற திரைபடத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற ஆபசமான காட்சிகள் உள்ளன.
இதையும் படிங்க: ராயப்பேட்டை மெட்ரோ ரயில் பணிகளில் சுணக்கம்.. முட்டுக்கட்டை போட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் சாடல்..!
இந்த டீசர் தற்போதும் ஆன் லைனில் உள்ளது. இது போன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகும். இது பாலியல் குற்றமாகும். எனவே இந்த ஆபாசமான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் சிறுவர் சிறுமியர் பாலியல் காட்சிகளை வெளியிட்ட கூகுள் நிறுவனம் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவதற்கு, யாருக்கு உத்தரவிட வேண்டும் என்பது தெளிவாக இல்லை. டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது காவல் நிலையத்தில் தனிப்பட்ட புகார் ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் , தனிப்பட்ட ஒரு நபருக்கான பாதிப்பு இல்லை. எனவே ஒட்டு மொத்த இளம் மாணவ பருவத்திற்கான பாதிப்பு. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறினார். இதை தொடர்ந்து , மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் கூறியது என்ன..?