சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசால் அனுசரிக்கப்படுகிறது. தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, கொமதேக ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வர் மு.க ஸ்டாலினுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!
இதேபோல், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைக் கழகச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அமைத்த குழு வெளிப்படையாக செயல்படும்..! நீதிபதி குரியன் ஜோசப் உறுதி..!