திமுக தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்தித்து, தனது தொகுதியான தூத்துக்குடியில் நிலவும் அவசர சாலை பிரச்னைகள் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
டெல்லியில் சாலைப்போக்குவரத்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, மதுரை-தூத்துக்குடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 38 (NH-38) பாதையின் மோசமான ஓட்டை உடைசல்களை மேம்படுத்த அவசர நடவடிக்கைகள் தேவை என்பதை எடுத்துக் கூறினார்.

கட்கரியிடம் ஒரு கடிதத்தை அளித்து, அதில் துரைசாமிபுரம், கீழ எரால், குருகுச்சலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆபத்தான விபத்து ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் (blackspots) மற்றும் சாலையின் மோசமடைந்த நிலை போன்ற குறிப்பிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: மகன் திருமணத்தை வைத்து எஸ்.பி.வேலுமணிக்கு நெட்டு கட்டிய திமுக... பாய்ந்தது அதிரடி வழக்கு...!
இந்த ஆபத்து மண்டலங்களை உடனடியாக சரிசெய்யவும், பயணிகளுக்கு ஏற்படும் அபாயங்களை குறைக்கவும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை விரைவுபடுத்துமாறு அவர் அமைச்சரை வலியுறுத்தினார்.
இந்தியா முழுவதும் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

"இந்தியாவின் நெடுஞ்சாலை மனிதர்" என்று அழைக்கப்படும் கட்கரி, நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பை நவீனப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் விபத்துகளை குறைப்பதற்கும் சாலைகளில் இணைப்பை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளுடன் கனிமொழியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு விரைந்து முடிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் மும்மொழி கொள்கை பிரச்சனை, தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கி உள்ள நிலையில் கனிமொழியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் சந்திக்கிறேன்! திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு..!