பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் பெண் போலீசாரிடமே காமுகன் ஒருவன் அத்துமீறிய சம்பவங்களும் அரங்கேறிய. பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம் ஆசிரியர்கள் சிலரும், சக மாணவர்களுமே பாலியல் தொல்லை அளித்ததாக தினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் பல இடங்களில் விளையாட சென்ற இடத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், வீட்டின் அருகே வசிப்பவர்கள் பாலியல் தொல்லை அளித்ததாகவும் போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திருவாரூர் அருகெ தனது சொந்த பேத்திக்கே தாத்தா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 7 வயது 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த சிறுமி, மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளாள். வகுப்பில் இருந்த நேரத்தில் சிறுமி திடீரென ஓடிச்சென்று வாந்தியும் எடுத்துள்ளார். இதை கவனித்த வகுப்பு ஆசிரியர், சிறுமியை ஓய்வெடுக்க கூறியுள்ளார். வகுப்பில் சிறுமியும் ஓய்வெடுத்துள்ளார். அப்போது அவ்வழியாக ரவுண்ட்ஸ் வந்த பள்ளி தலைமை ஆசிரியர், சிறுமி ஏன் சோர்வாக உள்ளாள் என ஆசிரியரிடம் கேட்டுள்ளார். சிறுமி காலையில் இருந்தே சோர்வாக இருப்பதாகவும், இடையில் ஒருமுறை வாந்தி எடுத்ததையும் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை.. சிறுமியிடம் அத்துமீறிய காமுகனுக்கு 25 ஆண்டு சிறை..!

சிறுமியை அருகில் அழைத்த தலைமை ஆசிரியர், காலையில் என்ன சாப்பிட்டாய் என கேட்டுள்ளார். உடலுக்கு சேராத எதையும் சாப்பிட்டாயா எனக்கேட்ட போது., நேற்று சிப்ஸ் சாப்பிட்டதாக சிறுமி கூறியுள்ளாள். சிப்ஸ் சாப்பிடக்கூடாது என தெரியாதா? உனக்கு யார் சிப்ஸ் வாங்கி கொடுத்தார்கள் என தலைமை ஆசிரியர் கேட்டதும், தனது தாத்தா தான் வாங்கி கொடுத்ததாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் சிறுமி பயந்தபடியே தெரிவித்துள்ளாள். ஏன் உன் தாத்தா அவ்வாறு சொன்னார். எதற்காக மிரட்டினார் என தலைமையாசிரியர் கேட்டதும், அழுதபடியே அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளாள்.

சிறுமி கூறியதை கேட்டு அதிர்ந்த தலைமை ஆசிரியர், உடனே சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்து, அவர்களை பள்ளிக்கு வரவழைத்துள்ளார். பெற்றோர் வந்ததும் சிறுமியின் சொந்த தாத்தாவே சிறுமியிடம் திண்பண்டம் வாங்கி கொடுத்து அத்துமீறியதை எடுத்து கூறிஉள்ளார். பெற்றோர் அதிர்ச்சி அடையவே, இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தலைமை ஆசிரியர் வலியுறுத்தி உள்ளார். அதன்பிறகு தலைமைஆசிரியரின் வழிகாட்டுதலின் படி, பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தாத்தா கிருஷ்ணமூர்த்தி (வயது 69) என்பவரை விசாரணை செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கடைக்கு சென்ற பெண் கடத்தல்.. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. சிக்கிய 3 பேர்..!