இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற குரல் தமிழ்நாட்டு மட்டுமல்ல இப்போது இந்திய ஒன்றியம் முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாள் விழா, அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழா - எழும்பூர் நீதிமன்றத்தின் 110 ஆவது ஆண்டு தொடக்கவிழா என மும்பெரும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில்,"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற குரல் தமிழ்நாட்டு மட்டுமல்ல இப்போது இந்திய ஒன்றியம் முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு உருவாக்கிக் கொடுத்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை நாம் எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். அவருடைய புகழை போற்றுகிறோம்.இந்தியாவில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை உடைக்க வேண்டும் என்று போராடினார் அண்ணல் அம்பேத்கர். அதனால்தான் அவருடைய பிறந்த நாளைச் சமத்துவ நாளாகக் கொண்டாடுகிறோம்.
இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, சமூக நீதியைப் பெற்று தந்தவர் அம்பேத்கர்தான். அவருடைய கொள்கையும், தந்தை பெரியாரின் கொள்கையும் பல இடங்களில் ஒரே கருத்தைதான் கூறுகின்றன.இருவருடைய கொள்கைகளும் பல இடங்களில் ஒத்து போயிருக்கின்றன. சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அதை நாம் பாதுகாக்க அனைவரும் இணைந்து உறுதியுடன் செயலாற்றுவோம்” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அம்பேத்கரே காவிதான்... திமுகவை திக.,காரன் சுரண்டி திங்கிறான்.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்..!