சென்னை கடற்கரை, எழும்பூர் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.எனவே, இன்று காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்தது.

இந்த நிலையில் மாணவர் போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா! புனே பேருந்தில் பெண் பலாத்கார வழக்கு.. 75 மணி நேரத்தில் குற்றவாளி கைதானது எப்படி..?

எனவே அந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இந்த பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு பஸ்சுக்குள் இளம்பெண் பலாத்காரம்.. சசோதரி என அழைத்தவன் செய்த கொடூரம்.. ஏசி பஸ்சில் தனியே சிக்கிய பெண்..