மக்களுக்கு மிகவும் பயனுள்ள போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான தங்களின் அன்றாட பயணங்களுக்காக இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. வேலை, மருத்துவ வசதி உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி இரண்டாவது வழிதடத்தில் முழுமையாக பாதை புதுப்பித்தல் பணி காரணமாக, மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு பின்வரும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலிக்கே பெருமை! பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே நாளை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் மற்றும் திருச்செந்தூர் திருநெல்வேலி இடையே காலை 10. 10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 ஆம் முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதேபோல் சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 21 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - கூடூர் பிரிவில் கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 17 ம் தேதி காலை 9.25 மணி முதல் மதியம் 2.25 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதன்படி மார்ச் 17 ம் தேதி காலை 5.40 மணிக்கு மூர்மார்கெட் வளாகத்தில் இருந்து புறப்படும் மூர்மார்கெட் காம்ப்ளக்ஸ் -சூலூர் பேட்டை மெமு பயணிகள் ரயில், சூலூர் பேட்டை - நெல்லூர் மெமு ரயில், மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில், மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர்பேட்டை மின்சார ரயில், மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி மின்சார ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட உள்ளது.

அதேபோல் காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் , காலை 10.15 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர்பேட்டை மின்சார ரயில், காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி மின்சார ரயில், காலை 11.45 ணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: போலீசை கண்டித்து மறியல்... சப்பர ஊர்வலத்தில் சலசலப்பு..!