தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெரும் வகையில், விழுப்புரத்தில் துணை கோட்ட ரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் சுமார் 1200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையை தரம் குறைத்து சுகாதாரமயமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதனை அடுத்து ரயில்வே மருத்துவ சேவை பிரிவின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் மத்தியில் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து விழுப்புரம் துணை கூட்ட ரயில்வே மருத்துவமனை முன்பு டி ஆர் இ யூ தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: விபத்தில் படுத்த படுக்கையான மாணவர்.. வலியுடன் பொது தேர்வு எழுதி நெகிழ்ச்சி..
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் ஓப்பன் லைன் தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். அதுமட்டுமின்றி தொழிற்சங்கத்தின் உதவி கோட்ட செயலாளர் வேந்தன், செந்தில், கோட்ட துணைத் தலைவர் பல்ராம், துணை பொதுச்செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இவர்கள் மட்டும் மின்றி ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: புதிய பிரச்னையில் கிளாம்பாக்கம்.. என்றுதான் விடிவுகாலம் பிறக்குமோ..?