தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வீட்டில் தனியே இருந்த காவலரின் தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வரும் விக்ராந்த் என்பவர் வழக்கம் போல பணிக்கு சென்ற நிலையில் அவரது தாய் மூதாட்டி வசந்தா மற்றும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

வேலைக்கு சென்று விட்டு விக்ராந்த் வீடு திரும்பிய போது தனது தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: நொண்டி, கூன், குருடு.. ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..? வலுக்கும் கண்டனம்..!

இதனை எடுத்து உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, சமூக இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் வசந்தா அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து வடக்கு பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் செல்வரதி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இலக்கிய திருவிழாவின் வித்து இரா. நாறும்பூநாதன் மறைவு!