திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது மொட்ட சபை தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே தான் போட்டி என்று விஜய் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய சீமான், திமுகவை வீழ்த்த வேண்டும் திமுகவுடன் மோதி அழிக்க வேண்டும் என்ற தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்பதாக தெரிவித்தார்.

திமுகவை வெறுத்த வேண்டும் என்பவர்கள் அனைவரும் பிரிந்து இருக்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், எங்கு பிரிந்து இருக்கிறோம், பால் சேர்த்துக் கொண்டு சண்டைக்கு போகும் மரபு தனக்கு இல்லை என்றும் தங்களது அண்ணனை உலக நாடுகள் படைகளை எதிர்க்க வந்தார்கள் என்றும் நான் எதிரியை தனித்து சந்திப்பேன் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் ஒரு குழந்தை..! நாங்க பல ரேஸ்ல ஜெயிச்சவங்க.. அமைச்சர் சேகர்பாபு சரமாரி தாக்கு..!

ஒரு நாய் நான்கு நாய்களை சேர்த்துக்கொண்டு வேட்டிக்கு சென்றால் சரியாக இருக்கும் ஆனால் ஒரு புலி 10 புலிகள் சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு சென்றால் சரியாக இருக்காது என்று தெரிவித்தார். கூட்டத்தில் நிற்க வீரமோ துணிவு தேவையில்லை என்று கூறிய சீமான் தனித்து நிற்க தான் வீரம் துணிவு தேவை நாங்கள் வீரர்கள் தனித்து நின்று மோதுவோம் என்று கூறினார்.

அவர் செய்கிறார் நீங்கள் ஏன் செய்யவில்லை என்றும் கூட்டணி இல்லாமல் எப்படி என்றும் நூறு பேர் கேட்கிறீர்களே... கொள்கை இல்லாமல் எப்படி என்று ஒருவர் கூட கேட்பதில்லை என்று கூறிய சீமான், எதிரியை தீர்மானித்து விட்டு களத்திற்கு வந்தவர்கள் நாங்கள் என்று பேசினார்.

யாரை வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு போருக்கு வந்துள்ளதாகவும் தங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை என்றும் நான்கு மாதத்தில் யாருடன் செல்கிறார்கள் என்பது தெரிந்து விடும் எனவும் கூறினார். மேலும் தங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை, ஆனால் நீங்களும் தெளிவாக இருங்கள் என்று சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்களுக்கு போட்டி யாரும் இல்ல..! 2026ல் திமுக தான்.. அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை..!