சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சமீபத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்காக போலீஸ் தனிபடை அமைத்து, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின் போது இளைஞர்கள் ஏராளமானோர் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் பீர்க்கன்காரனை ஏரிக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா உபயோகத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சமூக இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்து சதீஷ்குமார், சாமுவேல், தினேஷ் ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற விசாரணை மேற்கொண்டனர். இது மட்டும் இன்றி மூவரும் மறைத்து வைத்திருந்த சுமார் மூன்று கிலோ கஞ்சா மற்றும் 12 ஆயிரம் போதை மாத்திரைகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சமூக வலைதளங்கள் மூலம் பேசி பழகிய இவர்கள் மூவரும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆந்திராவில் இருந்து போதை பொருட்கள் கடத்தியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் காவலர் நிர்வாணமாக அட்ராசிட்டி.. பதறிப் போய் ஓடிய பெண் காவலர்கள்.. தலைக்கேறிய போதையில் ஆடிய காவலர் கைது..
இதையும் படிங்க: அம்மா உயிரோடு இருந்தா எதிர்ல நிக்க முடியுமா ஒ.பி.ஆர்? உட்கார்ந்தே கும்பிடுவது சரியா? இபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறல்