மகா கும்பமேளாவில் 55 கோடி பக்தர்கள் புனித நீராடினர் என்ற உத்தரபிரதேச அரசின் அறிவிப்பு தவறானது என அரசியல் வியூக அமைப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான, பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத், தலைமையிலான நிர்வாகம் வழக்கமாக புள்ளிவிவரங்களை "மிகைப்படுத்துவதாக" அதாவது பெரிது படுத்துவதாக பிரசாந்த் கிஷோர் விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.

ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 (மகா சிவராத்திரி) அன்று முடிவடையும் கும்பமேளாவில், இந்தியாவின் 110 கோடி சனாதன ஆதரவாளர்களில் பாதி பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இறுதி நீராடும் சடங்கின் போது இந்த எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இதையும் படிங்க: அண்ணாமலை, ஆளுநர் ரவி, ஜே.பி நாட்டா திடீர் சந்திப்பு..! ப்ரயாக்ராஜில் திடீர் ஆலோசனையால் பரபரப்பு..!
இது இன்று வரை உலகில் அதிகம் கலந்து கொண்ட மத, கலாச்சார அல்லது சமூக நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான டைம்ஸ் நவ்க்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் “55 கோடி பேர் புனித நீராடினர் என்பது இந்தியாவின் பாதி மக்கள் தொகையை குறிக்கிறது. இந்தியாவின் பாதி மக்கள் மகா கும்பமேளாவுக்குச் சென்று புனித நீராடினர் என்று நாம் சொல்கிறோமா? பாஜக அரசாங்கம் எல்லாவற்றையும் மிகைப்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. அவர்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய நிகழ்வாக ஆக்குகிறார்கள். என பிரசாந்த் கிஷோர் கடுமையாக குற்றம் சாட்டினார்.
இதுவரை30 பேரின் உயிரைப் பறித்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் அவர் கடுமையான தாக்குதலை தொடுத்தார் .

நெரிசல் ஏற்பட்ட நாள் முழுவதும், நெரிசல் நடந்ததா?இல்லையா? அது நடந்திருந்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அரசாங்கம் இதுவரை தெரிவிக்கவில்லை, இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்திருந்தால், இந்நேரம் அவர்களை ஒரு வழி ஆக்கி இருப்பார்கள் பாஜகவினர்
கும்பமேளாவில் இந்துக்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை, தன்னைத்தானே இந்து சார்பு அரசாங்கம் என கூறிக் கொள்ளும் இந்த பாஜக உத்தரப் பிரதேச அரசு, இந்துக்களுக்காக நடக்கும் விழாவில் என்ன தீங்கு நடந்துள்ளது என்பதைக் எடுத்து காட்ட யாரும் துணிய மாட்டார்கள், ”என்று பிரசாந்த் கிஷோர் காட்டமாக கூறினார். கும்பமேளாவில் உத்தரப்பிரதேச அரசு கூறி வரும் கணக்குகள் தவறானவை பொய்யான தகவல் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ள விஷயம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது
இதையும் படிங்க: சிறைக்குள் வந்த திரிவேணி சங்கமம்.. பாவங்களை போக்க புனித நீராடிய 90,000 கைதிகள்..!