தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில இயற்கை வேளாண்மை அரிசி திருவிழா ஆற்காட்ல நடந்துச்சு . KM இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில ஏராளமான ஸ்டால்கள் அமைச்சிருந்தாங்க. அதுல மக்களால் மறந்து போன பல அரிய வகை அரிசியை கண்காட்சிக்கு வச்சிருந்தாங்க. அதேபோல இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்துச்சு.

பலவிதமான செடிகள் பழங்கள் காய்கறிகள் விதவிதமான அரிசி வகைகள் மரத்திலான பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் கண்காட்சி கலகட்னுச்சி. இயற்கை விவசாயத்தை விரும்புறவங்களும் அதை ஊக்குவிக்கிறவங்களும் ஏராளமான பேரு அங்க கூடி இருந்தாங்க அவங்க பல்வேறு விதமான இயற்கை முறையிலான தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்தாங்க.மூலிகையில் நிறைந்த ஜூஸ் அப்புறம் சீரக சம்பா அரிசில செஞ்ச கஞ்சி எல்லாருக்கும் கொடுத்தாங்க.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம்..

ஆற்காடு சுத்தி இருக்கிற பள்ளிகள் கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகளும் அதேபோல சுற்றுப்புற பகுதிகளில் இருக்கிற பொதுமக்களும் இங்க வந்து கண்காட்சியை பார்வையிட்டாங்க அவங்க தங்களுக்கு தேவையான இயற்கை பொருட்களை வாங்கியும் போனாங்க ரெண்டு நாளு நடந்த இந்த நிகழ்ச்சியில இயற்கை விவசாயத்தை முன்னிறுத்துகிற சக்திகளாய் இருக்கிற இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்குனாங்க.

எட்டாவது ஆண்டா நடந்த இந்த ஆற்காடு அரிசி திருவிழாவுல கலந்துகிட்ட ஆயிர கணக்கான மக்களுக்கு இயற்கை அரசியல தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட கொடுத்து சந்தோஷப்படுத்தினாங்க.... மக்களும் ஆர்வத்தோட அதை வாங்கி சாப்டாங்க. நவீன காலம்னு சொல்லி கண்டதையும் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குற இந்த காலத்துல, உடலுக்கு நன்மை தரக்கூடிய இயற்கை முறையிலான பொருட்களை பார்க்கும் போதே நமக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சு....
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தோல்வியடைந்த, செயல்படாத அமைப்பு.. கொந்தளிக்கும் கபில் சிபல்.. எதிர்கட்சிகளுக்கு அழைப்பு.!!