மீனவர்கள் பிரச்சனையை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கையில் எடுத்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், கடலூரில் அடுத்த மாதம் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய் களத்திற்கு வந்து மக்களுக்காக போராட்டம் நடத்துவது நல்ல விஷயம். மக்களுடைய பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு களங்களில் போராடுவது அவசியமானது. ஆக மீனவர்களுடைய பிரச்சனையை அவர் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

நிதிப்பகிர்வில் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு செய்கிற ஓரவஞ்சனை குறித்து விவாதிப்பதற்காக அவையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை விண்ணப்பித்திருக்கிறோம். அரசு அதை அனுமதிக்காது. ஆனாலும் கூட அதனை எழுப்பி இருக்கிறோம். நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை குறித்து திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதோடு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து கலந்தாய்வு நடத்துவதற்குரிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் பற்றி பிரசாந்த் கிஷோர் சொல்றதெல்லாம் நடந்திடுமா.? துரை வைகோ கூல் பேட்டி.!

இந்த சூழலில் இந்த நாடாளுமன்றத் தொகுதி வரையறை தொடர்பாகவும் இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கோரிக்கை எழுப்ப திட்டமிட்டு இருக்கிறோம். ஹோலி பண்டிகையை முன்னிட்டு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படலாம் எனவே மூன்று நாட்கள் மட்டுமே இந்த வாரம் அவை நடக்கும், இந்த சூழலில் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எண்ணியுள்ளோம்.

தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இணைத்து நாங்கள் இந்த மாநாட்டிலே தீர்மானம் நிறைவேற்றினோம். ஐயா வைகுண்டர் பிறந்த நாளின் போது மார்ச் நான்காம் தேதி ஒரு நாள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளேன். தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு மாநில மட்டும் நிறைவேற்றி விடக்கூடிய பிரச்சனையும் அல்ல, இந்திய அளவிலும் அதை கொண்டு போய் சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: விஜய் அடுத்த முதல்வரா..? அவருக்கென்ன சீனியாரிட்டி இருக்கு..? வெம்பி வெடித்த திருமா..!