சமீபத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி சர்ச்சைகுள்ளானது. இந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பரேலியின் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் விஜய்க்கு ஃபத்வா அறிவித்துள்ளது.

சமூக விரோத சக்திகளை அழைத்து இப்தார் கூட்டத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜய்யின் செயல்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!

விஜய்க்கு எதிராக ஃபத்வா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜய்-ஐ எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம், விஜய்யிடம் இருந்து தமிழக இஸ்லாமியர்கள் தள்ளி இருக்க வேண்டும் என ஜமாத் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: (மு)துகெலும்புள்ள (க)ளப்போராளி ஸ்டாலின்! விஜய் பேச்சுக்கு சத்யராஜ் பதிலடி…