மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சதீஷ்
தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிச. 28-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது இதில் திமுக ,அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அழைப்புதல் வழங்கும் பணிநடைபெற்று வருகிறது .இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்கே சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ,பார்த்தசாரதி, நல்ல தம்பி ஆகியோர் நேரில் சந்தித்து விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வுக்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்கே சுதீஷ் நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூர நினைவு தின பேரணி நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றார் மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்
இதையும் படிங்க: ஈரோட்டில் ஈட்டி பாய்ச்சும் திமுக... கந்தலாகிக் கதறும் கதர் சட்டைகள்... தன்மானத்தை இழந்தால் 2026 அவமானம்..!