நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணையும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிகை ஒரு பாலியல் தொழிலாளி, அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறினார். இதனிடையே சம்பந்தப்பட்ட நடிகை கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி பாலியல் குற்றவாளி என்று கூறுவீர்கள் - சீறும் சீமான்

அந்த வீடியோவில், ''நான் பாலியல் தொழிலாளியாடா நாயே! இந்த நாள் வரை தப்பித்து விட்டாய். இந்த நொடியில் இருந்து எப்படி அடி வாங்கப் போகிறாய் என்று பாரு. நான் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தால் இப்படி தவித்துக் கொண்டு இருப்பேனா? என் கண்ணீர் உன்னை என்ன செய்யப் போகிறது என்று பார் '' என்று அழுது கொண்டே பேசியுள்ளார் விஜயலட்சுமி.
இதையும் படிங்க: சீமானுக்கு மத்திய அரசு 'Y' பிரிவு பாதுகாப்பு..? அமித் ஷாவுக்கு ரிப்போர்ட் கொடுத்த சென்உளவுத்துறை..!