காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்கும் அரசாணை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என காவலர் செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையினரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

காவலர்களின் உடல்நலம், மனநலம் கருதி வாரவிடுமுறை வழங்கி அரசாணை பிறப்பித்த முதலமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆனால் அந்த அரசாணை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்..! ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்..!

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் வாரவிடுமுறை வழங்குவதை உறுதி செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வாரவிடுமுறை வழங்காமல் தவறும்பட்சத்தில் மீண்டும் உயர்நீதிமன்ற கிளையை நாடலாம் எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கர்நாடக மாஜி டிஜிபி ஓம் பிரகாஷ் மர்ம மரணம்.. பெங்களூருவில் பெரும் பரபரப்பு.!!