காதல் திருமணம் செய்து கொண்டு பெண்கள் தங்களது குடும்பம் வேண்டாம் தனது காதலன் தான் வேண்டும் என்று கூறுவதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் திருப்பூரில் ஒரு பெண் ஒரு இளைஞருக்காக தனது புகுந்த வீட்டை வேண்டாம் என்ற கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் மனைவி தனது குழந்தையுடன் திடீரென மாயமானர். இதனால் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் காணாமல் போன அந்த பெண்ணை பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.

மேலும் இதுக்குறித்து பெண்ணின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்களும் தங்களது மகளை தேடி வந்தனர். அப்போது காணாமல் போன அந்த பெண் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். இதை கண்ட பெண்ணின் கணவர் குடும்பம் இதுக்குறித்து பெண்னின் குடும்பத்திற்கு தகவல் அளித்தனர். இரு வீட்டாரும் சேர்ந்து அந்த பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்த போது அந்த பெண்ணுடன் ஒரு இளைஞர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிக நாள் உயிருடன் இருக்கும் பெண்கள்.. ஏன் தெரியுமா..?
ஒருவேளை அந்த இளைஞர் தான் பெண்ணையும் குழந்தையையும் கடத்தியிருப்பாரோ என்று எண்ணி பெண்ணின் அம்மாவும், மாமியாரும் சேர்ந்து அந்த இளைஞரை தாக்கியுள்ளனர். தாக்கியதொடு மட்டுமில்லாமல் அந்த இளைஞர்களை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை கண்ட அந்த பெண் அம்மாவையும் மாமியாரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடம் தன் கணவரை அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றும் இளைஞரை ஏற்கனவே காதலித்து வந்ததாகவும் அவரை யாரும் அடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதை கேட்டு பெண்ணின் அம்மாவும் மாமியாரும் அதிர்ச்சியில் உறைந்துபோகினர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மாமியாரிடம் அவரது மகன் கட்டிய தாலியை கழட்டி வீசியுள்ளார் அந்த பெண். மேலும் குழந்தை தன்னுடையது என்று குழந்தையை கொடுக்க அந்த பெண் மறுத்துவிட்டார். அந்த பெண்ணின் செயலை பார்த்து அம்மா, மாமியார் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்தால் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: பெண்களுக்காக பெண்களால், பிங்க் நிற ஆட்டோக்கள்... தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!