செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்போண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் மாமுண்டர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வநதுள்ளார். இந்த நிலையில் சிவகாமி வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக அரசு பேருந்து மாமண்டூர் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாமண்டூர் பேரறிந்த நிலையத்தில் பேருந்து நின்ற போது, சிவகாமி இறங்க முயலும் போது கால் தடுமாறி பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் சிவகாமி பலத்த காயம் அடைந்துள்ளார். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சிவகாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல்விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

முன்னதாக தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக ஊழலை மறைக்கவே மொழி அரசியல்.. யாரும் தப்ப முடியாது...! அமித்ஷா ஆவேசம்..!