தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளத்தை அடுத்த ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். அப்போது அந்த பகுதியில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள காட்டாலங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்படவே நாளடைவில் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதனிடையே இளம் பெண் ஆஸ்பத்திரி மருத்துவமனையில் வேலையில் இருந்து விலகி, நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசையாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதனால் ராசுவும் அந்த பெண்ணும் அப்பொழுது சந்திக்க நேரிடாமல் இருந்துள்ளது. இதனால் ராஜு மன வேதனையா வேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இளம் பெண் வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் ராஜு வந்து பேசிக் கொண்டே ஊருக்கு போகலாம் ஊரில் கொண்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துள்ளார் ராஜு.
இதையும் படிங்க: இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி... விருதை தட்டிதூக்கிய பூர்ணிமா தேவி பர்மன்..!

தொடர்ந்து இளம் பெண் அச்சமடைந்து மறுக்கவே ஆத்திரமடைந்த ராஜூ இளம் பண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அவரை ஊருக்கு அழைத்துச் சொல்லாமல் காரில் குமரி மாவட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் அங்கு அறை எடுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க ராஜா திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம் பெண் டக்கம்மாள் புறம் அருகே வந்தபோது காரில் இருந்து வெளியில் குதித்துள்ளார். தொடர்ந்து ராஜுவிடம் இருந்து தப்பிக்க அந்தப் பெண் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வரை இந்த மாநகர போலீசார் ராஜுவை சம்பவ இடத்திலேயே பிடித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இளம் பெண் அழித்த புகாரி அடிப்படையில் போலீசார் ராஜூவிடம் விசாரணை மேற்கொண்டது இளம்பெண்ணை ராஜு காரில் வைத்தே பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இளம் பெண்ணை சந்திக்க முடியாததால் ஆத்திரமடைந்த ராஜு இவ்வாறு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெண்ணை கடத்த முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜுவை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கு வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பவிருந்த இளம் பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டன் கணக்கில் சமையல் மஞ்சள் கடத்த முயற்சி.. விரட்டி பிடித்து பறிமுதல் செய்த அதிகாரிகள்!