தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சென்னையிலும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரம் போன்றவற்றால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும், விற்பதாகவும் எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று போலீசார் வியாசர்பாடி முல்லை நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் அருகே வியாசர்பாடி எஸ் எம் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்கின்ற குள்ள பிரவீன் (வயது 21) என்ற நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் கொடுத்த தகவலின் பெயரில் கொடுங்கையூர் வாசுகி நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 26) வியாசர்பாடி பகுதியை சேர்ந்த குணா என்கின்ற அப்பு குணா (வயது 25) சாமுவேல் என்கின்ற டேவிட் (வயது 25) நித்திஷ் குமார் (வயது 22) ராக்கி (வயது 24) மணிகண்டன் (வயது 29) என மேலும் 6 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பெண் கல்லால் அடித்து கொலை.. கள்ளக்காதலன் போலீசில் சரண்.. தவிக்கும் குழந்தைகள்..!

இவர்களிடமிருந்து மொத்தம் 30 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதாகவும் அதனை விற்பனை செய்வதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் நேற்று போலீசார் கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 200 பலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கின்ற ஹாஸ்டல் சரவணன் (வயது 24) ராஜேஷ் (வயது 21) விக்னேஷ் (வயது 23) சாமுவேல் (வயது 20) என்பது தெரியவந்தது மேலும் இவர்கள் அனைவர் மீதும் ஏற்கனவே முன் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பயமுறுத்த தான் குத்துனோம்.. செத்துடுவான்னு நினைக்கல சார்.. இளைஞர் கொலையில் குற்றவாளிகள் வாக்குமூலம்..!