2026 இல் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி ஆறு மாதங்களுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார். ஒரு வேளை மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “நாங்கள் யாரிடமும் மறைமுகமாக பேசவில்லை.

2024ல் வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்தீர்களா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓட்டுக்களை சிந்தாமல் ஒருங்கிணைக்க வேண்டிய வேலை இருக்கிறது என்னும் கருத்தை முன் வைத்துள்ளார். பாஜகவை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது தேஜ கூட்டணியில் யார், யார் இருப்பார்கள், எந்த கட்சியில் இருப்பார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுக, தவெக கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்கும் பாஜக' - அனல் கிளப்பும் அண்ணாமலை..!
தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கைக்காக தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கப் போகிறோம். புதிய கல்விக் கொள்கை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை ஜனாதிபதியிடம் அளிக்க போகிறோம். எங்களுக்கு போட்டி அரசியலில் நம்பிக்கை கிடையாது. மக்களின் விருப்பத்திற்கு நேர்மாறாக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

2026ம் ஆண்டு தமிழகத்தில் புதிய ஆட்சி வரும்போது புதியக் கல்வி கொள்கை அடிப்படை விஷயமாக கொடுப்பப்பட வேண்டும். தேஜ கூட்டணி ஆட்சி அமையும் போது இது நடக்கும் என்று பேசினார்.
இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக பங்கேற்கவில்லை. இந்த அனைத்து கூட்டத்துக்கு பாஜக எதிர்ப்பை தெரிவித்திருத்தது. இந்த நிலையில் அண்ணாமலை பேசி இருந்து வைரலாகிறது.
இதையும் படிங்க: எல்லா பழியும் பாஜக மீது... மோதலை அண்ணாமலை- ஆளுநர் ரவி இடையே மடைமாற்றும் திமுக..!