சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 28. கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கு திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன், மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனஸ்தாபம் உருவாகி உள்ளது. இது குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து கொண்டே தனது மகளை தனியே பராமரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரியங்கா வழக்கம் போல நகை கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் தனது குழந்தை வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என நினைத்த பிரியங்கா, தனது 7 வயது மகளை புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

அப்போது சிறுமியின் பாட்டி வீட்டின் எதிர் வீட்டில் அருகே வசிக்கும் சேகர் என்பவர் சிறுமியிடம் வீட்டில் டிவி பார்க்கலாம் வா என அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிய சேகர், சிறுமியை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சோர்வாக இருந்த சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்துள்ளார். சிறுமியும் பயந்து கொண்டே எதுவும் சொல்லாமல், மறைந்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, திரும்பவும் ஞாயிற்று கிழமை பாட்டி வீட்டிற்கு செல்கிறாயா? என பிரியங்கா கேட்கவே, சிறுமி அழுதபடி மறுத்துள்ளார். ஏன் என பிரியங்கா மீண்டும் மீண்டும் கேட்கவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விஷயத்தை சிறுமி அழுதபடி தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சொத்து வாங்கியதை மறைத்த நீதிபதி..! கட்டாய ஓய்வு வழங்கியது செல்லும் - உயர்நீதிமன்றம்..!

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பிரியங்கா நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சேகர் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார். சிறுமியிட இப்படி ஒரு செயலை எப்படி செய்தாய்? என சண்டை போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் சேகரின் வீட்டின் முன் திரண்டு அவரை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால அச்சமடைந்த சேகர், தெரியாமல் செய்துவிட்டதாக சிறுமியின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் ஆத்திரம் தீராத பிரியங்கா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புளியந்தோப்பு போலீசார் சேகரை மீட்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புளியந்தோப்பில் பகுதியில் வசித்து வரும் 56 வயதான சேகர் என்பதும், இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டின் அருகே நடைபாதையில் உள்ள சிறிய கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிட்டத்தட்ட 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. வீட்டில் பதுக்கி வைத்தவர் போலீசில் சிக்கியது எப்படி?