சென்னை வியாசர்பாடி அம்மன் கோவில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின். வயது 28. இவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் முகமது ரசூல் என்பவர், இவரது வீட்டில் சில பெட்டிகளை வைத்துவிட்டு ஓரிரு நாட்களில் எடுத்து செல்வதாக கூறி உள்ளார். ஆனால் அவர் அதை திரும்ப எடுக்கவில்லை. வீட்டை அடைக்கும் பெட்டிகளால் தொந்த்ரவுக்கு ஆளான லியோண்ஸ் அதில் என்ன இருக்கிறது என பார்த்துள்ளார். அதில் மரக்கட்டைகள் இருப்பதை பார்ர்த்துள்ளார். மரக்கட்டைகளை எதற்காக வீட்டில் கொண்டு வந்து, அதுவும் பெட்டியில் அடைத்து வைத்திருக்கிறார் என லியோன்ஸ்க்கு சந்தேகம் வந்துள்ளது.

இதில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக அறிந்து கொண்ட இவர் லியோண்ஸ் பிராங்க்ளின், நேற்று காலை 11:00 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளர். தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் எனது வீட்டில் கட்டைகளை அடுக்கி வைத்திருப்பதாகவும் இதனால் எனக்கு தொந்தரவாக இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். சாதாரணமாக ஏதோ வீட்டு வாடகை பிரச்னையாக இருக்கும் என நினைத்த போலீசார் நேரில் சென்று பார்க்கலாம் என முடிவு செய்தனர். எனவே புகாரின் அடிப்படையில் செம்பியம் போலீசார் இதுகுறித்து சம்பவ இடம் சென்று விசாரித்த போது அந்த வீட்டில் அட்டைப்பெட்டியில் டன் கணக்கில் நிறைய கட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர்
இதையும் படிங்க: தனியார் கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து... பள்ளிக்கும் பரவியதால் பெரும் பதற்றம்..!

அதனை சோதனை செய்தபோது அவை அனைத்தும் செம்மரம் என்பது தெரியவந்தது. உடனே போலீசாருக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்து சுமார் 960 கிலோ மதிப்பிலான செம்மரக்கட்டைகளை செம்பியம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை யடுத்து செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான வியாசர்பாடி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 54 வயதான முகமது ரசூல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முகமது ரசூல் ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து வெளியிடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை எடுத்து செம்பியம் போலீசார் வனத்துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளையும் முகமது ரசூலையும் ஒப்படைத்துள்ளனர் தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தீரன் படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்..! சென்னையில் கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா கொள்ளையர்கள்..!