மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பற்றவைத்த மும்மொழி கொள்கை தீ தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்க வேண்டிய 5 ஆயிரம் கோடி கல்வி நிதி கிடைக்காது எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று தனது சோசியல் மீடியா பக்கத்தில், “கல்வியை அரசியலாக்க வேண்டாம்” என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில், அவர் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டியிருந்தார் தமிழகத்தில் என்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. நீங்கள் இந்த நிதியை கொடுக்காத காரணத்தினால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது உள்ளிட்ட பல விஷயங்களை சுட்டிக் காண்பித்து கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையிலே மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திலே பல விஷயங்களை சுட்டிக்காட்டி இருக்கின்றார் அவர், அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பது இந்த கொள்கைக்கு வழங்கக்கூடிய அந்த மகத்தான வாய்ப்புகள் மற்றும் வளங்களை தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தவற விடுகிறார்கள் எனத் தெவித்துள்ளார்.
இதையும் படிங்க: பற்றி எரியும் முன்மொழி கொள்கை விவகாரம்.. ஆங்கிலத்தில் முக்கியத்துவம்.. வலியுறுத்திய ராகுல்..!

தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்த விவகாரம் ஒரு பெரும் சர்ச்சையாக இருக்கக்கூடிய நிலையில் அமைச்சர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் கொடுத்திருக்கின்றார் ஏன் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் மும்மொழிக் கொள்கையை ஏன் படிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்வித்துறைக்கான நிதியை பெற முடியும் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

தர்மேந்திர பிரதானுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது சோசியல் மீடியா பக்கத்தில், மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்றும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2152 கோடி ரூபாய் இன்று வரை ஒதுக்காமலும், தமிழகத்தையும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும், ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28 அன்று முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெறும்” என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!