டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 68 தொகுதிகளுக்கு முன்னிலை தெரிந்த நிலையில், வெற்றி பெற 36 தொகுதிகள் போதும் என்றாலும், 42 தொகுதிகளில் பாஜகவும் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் முன்னணியில் இருந்தன.

ஆனால் தொடக்கத்தில் முன்னிலை வகித்து தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்ட கெஜ்ரிவால் மீண்டும் முன்னேற தொடங்கினார்.
10 மணி நிலவரப்படி புதுடெல்லி தொகுதியில் 4679 வாக்குகள் பெற்று அவர் மீண்டும் முன்னிலை வகித்தார்.
அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா அவருடன் நெருக்கமாக, அதாவது 4425 வாக்குகளை பெற்றிருந்தார். காங்கிரசின் சந்தீப் தீட்சித் 742 வாக்குகள் மட்டுமே பெற்று பின் தங்கினார்.
இதையும் படிங்க: டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி பின்னடைவு
கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட 1149 வாக்குகள் பின்தங்கி இருக்கிறார். இது போல் ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான மணீஷ் சிசோடியாவும் பின்தங்கி இருக்கிறார் .
இதையும் படிங்க: தட்டித் தூக்கும் பாஜக… துடைப்பத்தை தூக்கி எறிந்த டெல்லி மக்கள்… முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் அத்தியாயம்..!