தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் மாநில அரசை ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது சோதனைக்காகவா? அங்கு யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவா? அந்த மீனனை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காகவா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனக்கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ மூன்றாம் வீதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதியினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் வளாக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தவெகவுக்கு வந்த சோதனை… சென்னைக்கு வெளியே அனுப்பப்பட்ட நிர்வாகிகள்… குழப்பத்தில் விஜய்..!
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் மாநில அரசை ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது சோதனைக்காகவா? அங்கு யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவா? அந்த மீனனை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காகவா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

அதிமுகவில் உள்ள தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திற்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் தற்பொழுது நடந்து முடிந்தது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டன் முதல் முறையாக உதய சூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள். அதிமுக தொண்டரிடம் மனமாற்றம் வந்துள்ளது. அந்த மன மாற்றத்தை நாங்கள் வரவேற்கின்றோம். அதிமுக தொண்டர்கள் அவர்களது தலைமை சரியில்லை என்பதை உணர தொடங்கிவிட்டனர்.
நாம் தமிழர் கட்சி தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக அவர்கள் தேர்தலை சந்தித்து 234 தொகுதியிலும் டெபாசிட் இழந்த கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளையும் அவரின் பேரில் உள்ள சொத்துக்களையும் முறைப்படி தமிழ்நாடு அரசுடைய லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்டம் ஒப்படைத்துள்ளது. இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசின் உடைய பதிலையும் நீதிமன்ற உத்தரவையும் பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளியோ அவர்களை பிடித்து நாங்கள் கைது செய்கின்றோம். எந்த சூழ்நிலையிலும் தவறான நபர்கள் கைது செய்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. அண்ணாமலை சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது. ஒரு சம்பவம் நடப்பது என்பது இயற்கை அதனை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் ஒரு சம்பவம் நடந்த பிறகு அந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியம். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்துள்ளோம். இதன் பிறகு நீதிமன்றத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நாங்கள் நிரூபிப்போம்.
இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!