பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கைக்கும், மும்மொழி கொள்கைக்கும் தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க மும்மொழி கொள்கையை ஆதரித்து பேசும் அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மட்டும் மும்மொழி கொள்கையை படித்தால் போதுமா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் அமைச்சர் பிடிஆர் மகன்கள் எங்கு படிக்கிறர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், முன்றாவது மொழித்திணிப்பாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்க பாஜக முயற்சிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வடமாநிலங்களில் மும்மொழி சிறப்பாக செயல்படுகிறது என்பதை அவர்களால் ஆதாரத்தோடு காட்ட முடியுமா?, மும்மொழி கொள்கையால் வெற்றி பெற்ரனரா என்பதை அவர்களால் காட்ட முடியுமா என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது தான் உங்க இருமொழி கொள்கையா..? பிடிஆர்-ஐ கிழித்தெடுத்த அண்ணாமலை..!
தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழியும், பிறருடன் பேச ஆங்கிலமும் போதும் என்றும் கூறினார். வடமாநிலங்களில் இருமொழி கொள்கை கூட செயல்படுத்த வில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி இந்தி மட்டும் தான். அதனால் அவர்கள் இந்தி மொழியை படிக்கமாட்டார்கள். தமிழர்கள் மட்டும் இந்தி மொழியை படிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் என்னுடைய மகன்கள் இரு மொழி கொள்கையில் தான் படித்தார்கள் என்றும் கூறியுள்ளார். இதேபோல் கரூசில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை ஒரு கோமாளி என்றார். காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு என பேசும் அண்ணாமலை லண்டனில் எந்த மொழியில் பேசினார் என கேள்வி எழுப்பினார். மும்மொழி கொள்கை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்ற செந்தில் பாலாஜி, அண்ணாமலையை விமர்சித்தார்.
இதையும் படிங்க: அப்பா அப்பா-னு யாரு கூப்பிடுறாங்கனே தெரியல… ஸ்டாலினை கிண்டலடித்த அண்ணாமலை!!