விஞ்ஞானம் வளர, வளர தொழில்நுட்ப ரீதியிலான மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன, அந்த வகையில் சாமானியர்கள் மட்டுமின்றி படித்த பட்டதாரிகள், பெரும் தொழிலதிபர்கள் என பலரும் சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர்.
அந்த வகையில் தான் தொலைக்காட்சி சீரியல்களில் மிகப் பிரபலமாக இருக்கும் மிர்ச்சி செந்தில். இவர் ஒரு ரேடியோ ஜாக்கி ஆவார் ரேடிய மிர்ச்சி எஃப்எம் இல் மிகப் பிரபலமான இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னை ஒரு நபர் சைபர் மோசடியில் ரூபாய் 15 ஆயிரத்தை ஏமாற்றி விட்டதாக புகார் கூறியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக வீடியோ வெளியிட்டுள்ள செந்தில், அழுவதா? சிரிக்கிறதான்னு தெரியல எவ்வளவு தான் நம்ம படிச்சு உலக அறிவுல கரெக்ட்டா இருந்தாலும் ஒருத்தன் சப்பையா ஆன்லைன்ல whatsapp மெசேஜ்ல 15,000 ரூபாய ரொம்ப ஈஸியா என்கிட்ட இருந்து ஆட்டைய போட்டுட்டான்.
இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!
இந்த கதையை கேளுங்க சொல்றன், தெரிஞ்ச நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க. கோயம்புத்தூரில் இருக்கிற மிகப் பெரிய தொழிலதிபர் அவரு ஹோட்டல் அதிபர் அவருடைய வாட்ஸ் அப்பில் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வருகிறது, ஐ நீடு ஹெல்ப் என்று நான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் வந்த மெசேஜ் அது அவர்கிட்ட இருந்து மெசேஜ் வர்றது ரொம்ப அரிது . ஏனென்றால் அவ்ளோ பெரிய நபர் அவர் கிட்ட இருந்து இப்படி ஒரு மெசேஜ் அப்படின்னு ஷாக் ஆயிட்டு பணமா அனுப்பனுமா?gpay அனுப்பனுமான்னு கேட்டேன், நம்பர் ஒன்னு அனுப்பி இருந்தாரு அந்த நம்பரை நான் செக்கு கூட பண்ணல பணத்தை அனுப்பிட்டு பார்த்தா யோகேந்திரன் என்று வேற ஏதோ பேர் வருது அப்பதான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன் சார் நம்பர் இல்லாம வேற ஏதோ பேர் வருதே gpay ல அப்படி என்று யோசிக்க ஆரம்பிச்சேன்.

சாருக்கு அனுப்ப சொல்லாமல் வேறு யாருக்கும் அனுப்ப சொல்றாருன்னா ஒரு வேலை இது மோசடியா இருக்குமோன்னு நினைக்கறதுக்குள்ள அது ஸ்கேம் தான் எனக்கு புரிஞ்சிடுச்சு அதுக்குள்ள ஸ்டாப் பண்ணலாம்னு பார்த்தா முடியல பணம் போயிடுச்சு.
என்னோட நண்பற்கு போன் பண்ணி கேட்டா என்ன செந்தில் காலையிலே என்னோட போனை யாரோ ஹேக் பண்ணிடாங்க.இது ஒரு 500 ஆவது கால் ஆக இருக்கும் எனக்கு காலையிலிருந்து பதில் சொல்லி சொல்லி சலிச்சு போச்சு. பல பேருக்கு மெசேஜ் போயிருக்கு பல பேர் பணத்தையும் கொடுத்து இருக்காங்க இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்து இருக்கேன் எவனோ ஒருத்தன் குரூப்பில் புகுந்து அட்டாய போட்டானே என்று மிர்ச்சி செந்தில் வேதனையோடு தெரிவித்தார்.

நண்பர்களே இதுபோன்று ஏதாவது whatsapp மெசேஜ் அல்லது வேறு யாராவது உங்களுக்கு சந்தேகப்படும்படி கேட்டால் எமோஷனலாகவோ அல்லது அவரசாரப்பட்டோ அனுப்பி விடாதீர்கள்,சுட சுட சுட்டு கொண்டு வந்திருக்கிறேன்,இது என் சுட்ட கதை அல்ல பட்ட கதை என தனது இன்ஸ்டா பக்கத்தில் வேதனையோடு தான் ஏமாற்றப்பட்ட கதையை விவரித்து இருக்கிறார் பிரபல ரேடியோ ஜாக்கியான மிர்ச்சி செந்தில்..
இதையும் படிங்க: உலகின் அழகான 'வங்கி நோட்டு' எது? முதல் பரிசை தட்டிச் சென்ற ஐக்கிய அரபு அமீரகம்..!