''அரசியல் என்பது வெறும் மைக் எடுத்து பேசி விட்டு கை காட்டி விட்டு செல்வது இல்லை. வெறும் வாய் சவடாலா? சினிமா டயலாக்கா? களப்பணியா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்'' என விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பற்றி கடுமையாக விர்சித்து இருந்தார் ஆதவ் அர்ஜூனா. விஜய் மத்திய அரசை தாக்கிப்பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, ''கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்? மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்.

அரசியலைப் பொறுத்தவரை ஒரு ரவுடியை அடித்தால்தான் மக்கள் இன்னொருவரை ரவுடியாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால் பிரதமர் மோடியை விமர்சித்து பேசி இருக்கிறார் விஜய். குருவி, பீஸ்ட் என விஜய் நடித்த படங்களின் தயாரிப்புகளை மட்டுமல்ல, விநியோகஸ்தகத்தையும் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தான் செய்து வந்தது. நான் ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறேன். யாராவது பாஜக மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்றால் சகோதரர் விஜய் அவர்கள் அவரிடமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை குருவி படம் மூலமாக முதன் முதலில் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தது யார்?
இதையும் படிங்க: தவெக-வில் உட்கட்சி பூசல்... தாடி பாலாஜி சொல்வது என்ன..?

இன்றைக்கு மீடியா இன்டஸ்ட்ரீஸ் தனிப்பட்ட நபரின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில் இருக்கிறது என்றால், உதயநிதி ஸ்டாலினின் கண்ட்ரோலில் இருக்கிறது என்றால் அதுக்கு தேங்காய் உடைத்து, பூஜை போட்டது யார்? இன்றைக்கு மேடையில் ஏறி வாய் கிழிய பேசுகிறார்கள், அண்ணாமலை இப்படி? அப்படி? என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்லாவிட்டால் தப்பாக போய்விடும்.
இன்றைக்கு, முன்பு திமுகவுக்கு வேலை பார்த்தவர், லாட்டரி பணத்தை வைத்து திமுகவிலிருந்து விசிகவுக்கு தாவினார். லாட்டரி பணத்தை வைத்து விசிக-வில் இருந்து விஜய் கட்சிக்கு தாவி இருக்கிறார். அவருடைய ஐடியா என்னவென்றால் தமிழக வெற்றி கழகத்தை லாட்டரி விற்பனை கழகமாக மாற்ற வேண்டும் என்பது அவரது ஐடியா. தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் சரியில்லை, இதை லாட்டரி விற்பனை கழகமாக மாற்றினால் நல்லாயிருக்கும் என்று விஜய்யோடு போய் இணைந்து இருக்கிறார்.

இன்றைக்கு அவர்கள் என்னை பற்றி குறை சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊழலை உடைத்துப் பேசுவதில் நம்பர் ஒன் பாஜக தான். மக்கள் மன்றத்தில் இருப்பதும் பாஜக தான். ஆளுங்கட்சியின் அவதூறு பேச்சுகளால் பிரச்சனைகளில் மாட்டிருப்பது பாரதிய ஜனதா கட்சி. ஆகையால் எங்களைப் பார்த்து நாங்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்றால் நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய பேச்சு எப்படிப்பட்ட பேச்சு என்பதை யோசித்துப் பாருங்கள்'' தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது விஜயின் பேராசை..! தவெக பொதுக்குழுவில் வீராப்பு பேச்சு... கடுப்பான அதிமுக..!