டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு அமரிக்க அரசில் தேவையானதைவிட அதிக சக்தி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது சொந்த விருப்பப்படி எந்த முடிவையும் எடுக்க முடியும். இது மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் பலர் டிரம்ப் ஜனாதிபதி நாற்காலியில் வெறுமனே அமர்ந்திருப்பதாகவும், உண்மையான அதிகாரமும், முடிவெடுக்கும் உரிமையும் மஸ்க்குக்கு இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதுபோன்ற வதந்திகளுக்கு மத்தியில், வெள்ளை மாளிகை மஸ்க் குறித்து ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எலோன் மஸ்க்கிற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசு முடிவுகளையும் எடுக்க அதிகாரம் இல்லை என்று வெள்ளை மாளிகை நீதிமன்ற ஆவணத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அரசின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மஸ்க்கிற்கு முறையாக வழங்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கியுள்ளது. எலான் மஸ்கிஸ்கிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றால் அவர் என்ன செய்வார்கள்? உண்மையில், மஸ்க் ஜனாதிபதி டிரம்புக்கு ஆலோசனை வழங்கவும், அவரது அறிவுறுத்தல்களை தெரிவிக்கவும் மட்டுமே முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 27 வயது மெழுகு சிலை.! கலக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின்

வெள்ளை மாளிகை நிர்வாக அலுவலகத்தின் இயக்குனர் ஜோசுவா ஃபிஷர், ''எலோன் மஸ்க் ஒரு வெள்ளை மாளிகை ஊழியர். ஆனால், அவர் ஒரு நிரந்தரமற்ற சிறப்பு அரசு ஊழியராக பணிபுரிகிறார். அவருக்கு ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அரசின் எந்தவொரு கொள்கையையோ, முடிவையோ தாமாகவே எடுக்க முடியாது.
மற்ற மூத்த வெள்ளை மாளிகை ஆலோசகர்களைப் போலவே, மஸ்க்கின் பங்கும் ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே. எலான் மஸ்க், அதிபர் டிரம்புக்கு ஆலோசனை வழங்க மட்டுமே செயல்படுகிறார். ஆனால் எந்தவொரு அரசாங்க முடிவையும் செயல்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை. எலான் மஸ்க்கின் பணி வெள்ளை மாளிகைக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே இருக்கும்'' என்று ஜோசுவா ஃபிஷர் கூறியுள்ளார்.

'யுஎஸ் டாட்ஜ் சர்வீஸ்' என்பது அதிபரின் நிர்வாக அலுவலகத்தின் ஒரு பகுதி அமெரிக்க செயல்திறன் சேவை தற்காலிக அமைப்பு. ஆனால் அது வெள்ளை மாளிகை அலுவலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது '' என்று ஜோசுவா ஃபிஷர் மேலும் விளக்கினார். அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு எந்த முக்கிய பங்கும் இல்லை என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.
இதையும் படிங்க: 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ராஜினாமா மின்னஞ்சல்… 8 மாத ஊதியத்துடன் வெளியேறலாம்… அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்..!