ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்த்தியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் - ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த குரூப்பில் நியூசிலாந்து, வங்கதேச அணிகள் பலப் பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில். 9 விக்கெடுகள் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து எட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஏ குரூப்பில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறின. தலா இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
இந்தியாவும் நியூசிலாந்தும் மார்ச் 2 அன்று குரூப் சுற்று போட்டியில் விளையாடுகின்றன. வரும் மார்ச் 4ஆம் தேதி துபாயில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி குரூப் பி-யில் தகுதி பெறும் அணியுடன் விளையாடும்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு..? ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி கணிப்பு..!
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தானில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தீவிரவாதிகள் வைத்த குறி..!