ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) எதிர்கொள்கிறது. இந்நிலையில் பல முன்னாள் வீரர்கள் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணிப்புகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் முதல் போட்டியில் ஆர்சிபி இன்று விளையாட உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவன் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ள கருத்து ஆர்சிபி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

இதுதொடர்பாக கில்கிறிஸ்ட் கூறுகையில், "இம்முறை ஆர்சிபி அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கவே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்குக் காரணம் அந்த அணியில் அதிகளவில் இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். இதனால்தான் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும். எனக்கும் விராட் கோலிக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. விராட் கோலி யின் ரசிகர்களுக்கு நான் எதிரானவன் கிடையாது.
இதையும் படிங்க: ஐபிஎல் டி20 திருவிழா இன்று ஆரம்பம்... பிசிசிஐ அறிவித்த 4 புதிய விதிகள் என்ன..?
ஒரு வேளை நான் தவறாக ஏதேனும் சொல்லி இருப்பதாக கருதினால் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். ஆர்சிபி அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதன் ரசிகர்கள் அந்த அணி நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும். ஏலத்தில் நல்ல வீரர்களை எடுங்கள் என்று சொல்ல வேண்டும்” என்று ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஆர்சிபி அணி கே.எல் ராகுல் அல்லது ரிஷப் பன்ட் ஆகியோரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இங்கிலாந்தின் பில் சால்ட் (ரூ.11.50 கோடி), லிவிங்ஸ்டோன் (ரூ.8.75 கோடி), ஜேக்கப் பேத்தல் (ரூ. 2.60 கோடி) ஆகியோரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆர்சிபி அணியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் உள்ளதால் அதைத்தான் கில்கிறிஸ்ட் கிண்டல் அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: IPL 2025: 65 நாட்கள் 74 போட்டிகள்.. ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெகா விருந்து.!!