ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு பெரும் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. படிப்பினைகள் மேலும் தொடரும் என்பதால் வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். தோல்வியடைந்தவுடன், பிசிசிஐயின் அணுகுமுறை நாள் தோறும் மாறி வருகிறது. சமீபத்தில், வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயணம் செய்வதற்கான கால வரம்பை பிசிசிஐ குறைத்தது. இது தவிர, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மேலாளர் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூம், அணி பேருந்தில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இப்போது பிசிசிஐ வீரர்களின் தனிப்பட்ட ஊழியர்களை அழைத்துச் செல்லவும் பிசிசிஐ தடை விதித்துள்ளது.

அதன்படி, இந்திய அணி வீரர்கள் தங்கள் தனிப்பட்ட ஊழியர்களுடன் அதாவது சமையல்காரர், சிகையலங்கார நிபுணர், ஒப்பனையாளர், தனிப்பட்ட பாதுகாப்பு காவலர் ஆகியோருடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயணிக்க முடியாது. இந்திய அணியின் பல வீரர்கள் தங்கள் தனிப்பட்ட சமையல்காரர்களை தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களில் ஹர்திக் பாண்ட்யாவும் ஒருவர்.
இதையும் படிங்க: இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடு! வெளிநாடுகளுக்கு குடும்பத்தை அழைத்துச் செல்வதில் சிக்கல்...

இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடருக்குத் தயாராக அனைத்து வீரர்களும் கொல்கத்தாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 18 ஆம் தேதி அனைவரும் ஈடன் கார்டன்ஸில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் கொல்கத்தாவில் மூன்று நாட்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஜனவரி 22 முதல் தொடங்கும்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பு, இந்த தடையை அறிவித்துள்ளது.பிசிசிஐ இந்திய அணியின் பயிற்சிக் குழுவில் ஆறாவது உறுப்பினரைச் சேர்த்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதாஷு கோட்டக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, கம்பீர் தலைமை பயிற்சியாளரான பிறகு, அணியில் பேட்டிங் பயிற்சியாளர் இல்லை. அபிஷேக் யர் மற்றும் டென் டெஸ்கேத் ஆகியோர் அணியில் உதவி பயிற்சியாளர் பதவியில் உள்ளனர், அவர்களின் பங்கு இன்னும் தெரியவில்லை. இது தவிர, மோர்னே மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், டி. திலீப் பீல்டிங் பயிற்சியாளராகவும் உள்ளனர்.
இதையும் படிங்க: ரோஹித் - கம்பீருக்கும் இடையே விரிசல்..? தெளிவுபடுத்திய பிசிசிஐ..!