ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் நாளை முதல் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதை தொடர்ந்து 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் டீமோடு ரிக்கி பாண்டிங் செய்த செயல்... கடுப்பான பாக். ரசிகர்கள்!!

இந்த போட்டியில் காயம் காரணமாக பும்ரா விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சீசனில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்து வீசியதாக ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். இதனால் தனக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என ஹர்திக் பாண்டியா அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாலை 6.30 முதல் 6.50 மணி வரை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனிருத் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் முதல் மேட்ச்சுக்கு வந்த சிக்கல்... செய்வதறியாது தவிக்கும் பிசிசிஐ!!