இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை உருவக்கேலி செய்த பெண்ணுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடி வருகிறது. குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா பெரிதாக ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் ரோஹித் சர்மாவை உருவக்கேலி செய்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு விளையாட்டு வீரருக்கு இருப்பதை காட்டிலும் ரோஹித் சர்மா அதிக எடையுடன் இருக்கிறார்.
இதையும் படிங்க: மைதானத்தில் குட்டி ரோஹித்தை கொஞ்சிய அனுஷ்கா சர்மா... வைரலாகும் புகைப்படம்!!
அவர் இன்னும் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். இந்திய அணியின் மிகவும் தகுதியில்லாத கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரோஹித் சர்மாவின் பேன்பேஸ் ஷாமா முகமதுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் பாஜகவும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து ஷாமா முகமதுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளால் தனது பதிவை ஷாமா முகமது நீக்கியுள்ளார்.

இருந்தாலும் இந்திய அணியின் கேப்டனை அவர் எப்படி இழிவாக, அதுவும் உருவக்கேலி செய்து பேசுவார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரான ஷமி, ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவை வைத்து கொண்டு நியூசிலாந்து அணியை ஓரம்கட்டினார். பல போட்டிகளில் சதம் அடித்து இந்திய வெற்றிக்கு உதவினார். அவரும் சிறந்த கேப்டனாக பல முறை தன்னை நிரூபித்துள்ளார் என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சாமா முகமதுவின் தனிப்பட்ட கருத்தை அரசியலாக்க முயன்ற பாஜக அதை கடுமையாக விமர்சித்தும் வருகிறது.
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் சாதனை முறியடிப்பு: ஆப்கானிஸ்தான் வீரர் ஜத்ரான் அபாரம்..!