2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் சிஎஸ்கே அணி தொடக்கம் முதலே மோசமாக ஆடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வீரர்கல் 100 ரன்கள் அடிக்கவே தடுமாறினர். இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாக மாறிவிட்டது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் 8 போட்டிகள் இருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் பந்தயத்தில் இருக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி சரியாக விளையாடவில்லை என்றாலும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிக மோசமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்… ஈசியாக தட்டி தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எங்கள் அணியில் உத்வேகம் இல்லை என்பது உண்மை. நாங்கள் தற்போது சரியாக விளையாடவில்லை. அதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். எங்கள் மீது தவறு இருக்கிறது என்பதை கையை உயர்த்தி நாங்கள் ஆமோதிக்கின்றோம். இதனால் எங்களால் திரும்பி வெற்றி பாதைக்கு திரும்ப முடியாது என்றெல்லாம் கிடையாது. உடனடியாக அனைத்தையும் மாற்றி சரி செய்ய முடியாது என்றாலும் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றோம்.

எங்களுக்கு சாதகமாக உத்வேகத்தை மாற்றினால் எங்கள் அணி நிச்சயம் நம்பிக்கையை பெறும். இதன் மூலம் சில வெற்றிகளை நாங்கள் பெற்றால் மீண்டும் எங்கள் அணி வீரர்கள் நம்பிக்கையை பெறுவார்கள். உங்களால் ஐபிஎல் தொடர் குறித்து எதையும் சரியாக கணிக்க முடியாது. நாங்கள் தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நீண்ட நெடிய தொடர். எது வேண்டுமானாலும் நடக்கலாம். திடீரென்று அனைத்துமே தலைகீழ் மாறலாம். இதனால் எங்களால் பிளே ஆப்க்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதல பாதாளத்தில் சிஎஸ்கே... இதை விட மோசமா விளையாடவே முடியாது; ரசிகர்கள் விமர்சனம்!!