சிஎஸ்கே அணி இப்படித் தடுமாறி இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விமர்சனம் செய்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொடருக்கு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் தோல்விகளால் அணியும் ரசிகர்களும் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, கடுமையான விமர்சனங்களை சிஎஸ்கே மீது வைத்துள்ளார். " சிஎஸ்கே அணி நிர்வாகம் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் விட்டது பெரிய தவறு. அதேபோல ப்ரியன்ஸ் போன்ற திறமையான இளம் வீரர்களும் ஏலப் பட்டியலில் இருந்தனர். அவர்களையும் ஏலத்தில் எடுக்கவில்லை. அணியின் நிர்வாகமும் தலைமை பயிற்சியாளரும் தரமான வீரர்களை வாங்குவதில் கவனம் செலுத்தவில்லை. சி எஸ்கே அணி இப்படித் தடுமாறுவதை இதற்கு முன்பு பார்த்ததில்லை.

ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே ரூ. 120 கோடி கையில் வைத்திருந்த நிலையில், ரூ. 65 கோடிக்கு ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தோனி, துபே, பதிரானாவை தக்க வைத்ததும், புதிய வீரர்களை வாங்கும் வாய்ப்பை குறைத்துவிட்டது" என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிஎஸ்கேவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்.. முதல் போட்டி தோல்விக்கு பழி தீர்த்தது.!!
இதையும் படிங்க: இறுதி வரை போராடி தோற்ற RR… 2 ரன்கள் வித்தியாசத்தில் LSG அபார வெற்றி!!