2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே சில அணிகள் மோசமாக விளையாடி வருகிறது. ஒருபுறம் அணிகள் சொதப்பி வரும் நிலையில் மறுபுறம் ஒரு சில அணிகளில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் மோசமாக விளையாடி வருவது அணியின் உரிமையாளரை கவலையடைய செய்துள்ளது. அந்த வகையில் டெல்லி அணியின் தொடக்க வீரரான மெக்கர்க் மிக மோசமாக விளையாடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமானார். இவர் 9 இன்னிங்ஸில் 330 ரன்களை குவித்தார். இவரது பேட்டிங்களை பார்த்து எதிரணிகள் திணறின. ஆனால் அவர் ஐபிஎல் தொடருக்கு பின் எந்த லீக் தொடர்களிலும் ரன்களை குவிக்கவில்லை என கூறப்படுகிறது. இருந்த போதிலும் நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் மெக்கர்கை ரூ.9 கோடிக்கு மீண்டும் டெல்லி அணியே வாங்கியது.
இதையும் படிங்க: எல்லா போட்டிகளும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. RR கேப்டன் சஞ்சு சாம்சன் ஓபன் டாக்!!

இதனால் டெல்லி அணிக்கு இம்முறை பயங்கரமான தொடக்கத்தை மெக்கர்க் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் டெல்லி அணியின் எதிர்பார்ப்பையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மெக்கர்க் ஏமாற்றிவிட்டார். நடப்பு சீசனில் அவர் விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 55 ரன்களை மட்டுமே அவர் சேர்த்துள்ளார். அதிலும் 2 இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆகியுள்ளார். 3 இன்னிங்ஸில் 1, 7, 9 என்று ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் அவர் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் இவருக்கு பதிலாக வேறு வீரரை விளையாட வைக்கலாம் எனவும் இவருக்கு 9 கோடியா எனவும் விமர்சித்து வருகின்றனர். இவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட டூ பிளசிஸ் காயம் காரணமாக பெஞ்சில் இருப்பதால், டோனவன் ஃபெரேரா போன்ற வீரரை களமிறக்கலாம் என கிரிக்கெட் வல்லூர்நர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இதுக்கு நான் தான் காரணம்... தன் மீது பழி போட்டுக்கொண்ட KKR கேப்டன்!!