2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் ஆர்யா 12 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 250 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் அவர் கொல்கத்தா அணியின் பந்துகளை அடித்து விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட 2வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: PBKS இலக்கை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை இருக்கிறது.. அடித்து சொன்ன KKR கேப்டன்!!

அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்களிலும் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நேஹல் வாதேரா 10 ரன்களிலும் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும் சூரியன் ஷெட்ஜ் 4 ரன்களிலும் மார்கோ ஜான்சன் 1 ரன்னிலும் ஷஷங்ச் சிங் 18 ரன்களிலும் சேவியர் பார்ட்லெட் 11 ரனகளிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அர்ஷ்தீப் சிங் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். 15.3 ஓவரிலேயே பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வெறும் 111 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை அடுத்து 112 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: PBKS இலக்கை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை இருக்கிறது.. அடித்து சொன்ன KKR கேப்டன்!!