டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளில் உலகப் புகழ்பெற்ற தொடர் ஐபிஎல் 2008ஆம் ஆண்டில் தொடங்கியது. ஒவ்வோர் ஆண்டும் கோடை வெயிலைவிட கிரிக்கெட் ரசிகர்களை தகிக்க வைக்கும் இத்தொடரின் 18ஆவது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், கடந்த நவம்பரில் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. தற்போது ஒவ்வொரு அணியும் ஐபிஎல்லுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் அட்டவணை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி அன்று முதல் போட்டி நடைபெற உள்ளது. தொடரின் இறுதிப் போட்டி மே 25 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. மார்ச் 22ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. மார்ச் 23இல் ஆம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டி ஹைதராபாத்தில் மோத உள்ளது.
அன்றைய தினம் இரவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பலப் பரீட்சை நடத்துகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 23, 28, 30; ஏப்ரல் 5, 8, 11, 14, 20, 25, 30 ; மே 3, 7, 12, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபயர் போட்டி, மே 20 அன்றும், எலிமினேட்டர் போட்டி மே 21 அன்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகின்றன. இரண்டாவது குவாலிஃபர் போட்டி மே 23இல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி கொல்கத்தாவில் மே 25இல் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025-ல் சாதனை: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனானார் ரிஷப் பந்த்..!